
ஆர்வலர்கள் கலந்து கொள்ளுமாறும், நண்பர்களுக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
(மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழின் மேல் அழுத்தவும்)
எல்லாவற்றையும் அறிவதற்கு யார் வெளியில் பேசிக்கொண்டிருப்பது

கூரையும் சுவர்களும் தாய்மார்களின் வற்றியமடிகளின் ஆழத்தில்குழந்தைகளின் கால்கள்உடைந்து கிடக்கபாதணிகள்உக்கிக்கிடந்தன.அவர்களின் உதடுகள்உலர்ந்து கிடக்கின்றனநாவுகள் வரண்டுநீள மறுக்கின்றனநாங்களும்திறனியற்ற நாவால்இந்தக் குழந்தைகள்கருவூட்டப்பட்டிருக்கையில்
எதைப் பேசினோம்?
தீபச்செல்வன்------------
---------------------------------------
முழு யுத்தத்திற்கானபிரகடனமாககுட்டையடைந்த நாய்பெரியதாய் ஊழையிடுகிறது.வீட்டு வாசலில்வந்து நின்ற போர்கதவை சத்தமாக தட்டுகிறது.
தீபச்செல்வன்------------
யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்.---------------------------------------கான்ஸ்பிரஸ்கரின்சிரிப்புடன் கூடிய படம்எரிக்சொல்கெய்மின்சிரிப்புடன் கூடிய படம்எல்லாம் சுவர்களில்இருந்து அகற்றவேண்டி ஆகிவிட்டது.அவர்கள்தான்எங்களுக்கானபியர்களைஎடுத்து வந்திருக்க வேண்டும்.
தீபச்செல்வன்------------
-------------------------------------
நான் பயங்கரவாதிஎன்பதைஉரத்துசொல்கிறேன்.என்னை அமெரிக்காவின் நேர்மைதேடிவருகிறதுஜநா படைகளும்அமெரிக்காப் படைகளும்இந்தியப் படைகளும்இலங்கைப்படைகளைப்போலஎனது தெருவுக்கு வரஆசைப்படுகிறார்கள்.தீபச்செல்வன்-------------
பதுங்குகுழிகளும் பயங்கரவாதிகளும்
---------------------------------------
எனது வீடு எந்த கிராமத்திலிருக்கிறதுஎனது பேஸில்யாருடைய படம் இருந்ததுஎந்த பிரதேச வாடையுடையஉடைகளைநான் அணிந்திருந்தேன்எனது தலைமுடிஎப்படி சீவப்பட்டிருந்தது?யார் என்னை கவனித்தார்கள்எந்த முகாங்கள்அமைந்திருக்கும் வீதியால்நான் பயணிக்காதிருந்தேன்?எந்த சீருடைகளுக்குநான் அச்சமாயிருந்தேன்?தீபச்செல்வன்
-------------
Copyright © 2009 களவெளி.
வணக்கம் தீபச்செல்வன்
பதிலளிநீக்குசுடருள் ஒளி நிகழ்வில் கலந்து கொண்டேன். தங்கள் கவிதைத் தொகுப்பான பதுங்குழியில் பிறந்த குழந்தை என்ற கவிதைத் தொகுதிக்கான விமர்சனங்களின் பின்னர் தாங்கள் அனுப்பி வைத்த கடிதமும் நிகழ்ச்சி ஒழுங்காளர் ஒருவரான சுதனால் வாசிக்கப்பட்டது. தங்கள் கடிதம் என கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அது ஒன்றை மட்டுமே செய்யக்கூடிய கையறு நிலையில்தான் பல புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
தங்கள் கவிதைகளின் ஒவ்வொரு வரியும் வன்னி மக்களின் நிலையை துல்லியமாக எடுத்துக் கூறிகின்ற போதும் என் போன்றவர்களுக்கு அவை கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருப்பதை இட்டு நான் வெட்கிப் போகின்றேன். தனிப்பட்ட முறையில் நான் ஒன்றும் செய்யவில்லையே என்பதும், என்ன செய்வது என்ற தெரியாத நிலையும் குற்ற உணர்வாகித் தினம் தினம் அரிக்கின்றது.
சுடருள் ஒளி நிகழ்வின் பின்னர் நிகழ்வு ஒழுங்காளர்களுடன் சேர்ந்திருந்து பல மணிநேரங்கள் தங்களைப் பற்றியும் தங்கள் கவிதைகள் பற்றியும் உரையாடினோம். கூடிக் கூடி உரையாடுவதும் பின்பு இயல்பான வாழ்விற்குத் தள்ளப்படுவதுமே புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வாகிப் போயிற்று.
உங்கள் கவிதைகளுக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக தங்கள் கடிதம் என்னை மிகவும் பாதித்தது.
அன்புடன்
சுமதி ரூபன்