பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ என்ற கவிதை புத்தகம் வெளிவருகிறது

எனது ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ என்ற கவிதை புத்தகம் எதிர்வரும் டிசம்பர் 30ம் திகதி நடைபெறவுள்ள 34ஆவது வென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவருகின்றது. ஈழத்தின் வடக்குப் போர் பற்றிய எனது உணர்வுகளையும் அனுபவங்களையும் கொண்ட இந்த கவிதைத் தொகுதிக்கு சுகுமாரன் முன்னுரையை எழுதியுள்ளார். ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற எனது முதல் நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருந்தது. இரண்டாவது தொகுப்பான ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ என்ற இந்தத் தொகுப்பை தமிழகத்திலிருந்து வருகின்ற உயிர்மை என்ற மாத இதழின் உயிர்மை பதிப்பகம் வெளியிடுகின்றது.

உலகளவில் முக்கியம் வாய்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்யும் சென்னைப் புத்தக கண்காட்சி வருடம்தோறும் நடந்து வருகிறது. உயிர்மை பதிப்பகத்தால் 90 புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. 13 நாடுகளிலிருந்து எழுதப்பட்ட நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த 51 படைப்hளிகளின் புத்தகங்கள் வெளிவருகின்றது. ஈழத்தை சேர்ந்த வ.ஐ.ச.ஜெயபாலனின் அவளது கூரைமீது நிலா ஒளிருகிறதுஇ தமிழ்நதியின் கானல்வரி முதலிய தொகுப்புக்களும் வெளிவருகின்றன. சாருநிவேதிகா, ஜெயமோகன், சுஜாதா, எஸ்.ராமகிருஸ்ணன், யமுனாராஜேந்திரன் மனுஸ்யபுத்திரன், ரவிக்குமார், வாஸந்தி, யுவன்சந்திரசேகர் போனறவர்களின் நூல்களும் வெளியிடப்படுகின்றது. காலச்சுவடு, ஆழி, காவ்யா, க்ரியா போன்ற பதிப்பகங்களும் பல நூல்களை வெளியிட இருக்கின்றன. அடுத்த எனது 'பாழ் நகரத்தின் பொழுது' என்ற கவிதைப் பிரதியை காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக